எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.
பாரிவேந்தரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் மனு மீதான விசாரணையும் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணையின்போது, பணத்தை திருப்பிக்கொடுப்பதாக பாரிவேந்தரின் மகன் ரவி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.