புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

நெடுங்கேணி வாழ் மக்களின் தேனை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்

நெடுங்கேணி ஒலுமடு  வாழ் மக்களின் வாழ்தார ஜீவனோபாயத்திற்காக காட்டினில் தேன் எடுத்து வந்த மக்களின் தேனைப் நெடுங்கேணி
வன இலாகாவினர் பிடுங்கிச்சென்றனர்.
நெடுங்கேணி ஒலுமடுமடுப் பகுதியில் வசிக்கும் நால்வர் நேற்றைய தினம் காலையில் காட்டிற்குச் சென்று தேன் சேகரித்து மாலையில் வீடு திரும்பிய வேளையிலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தருகையில் .
நாம் ஆண்டாண்டு காலமாக தேன் எடுக்கும் தொழிலை நம்பியே எமது வாழ்வாதாரம் உள்ளது. தேனை எடுப்பது என்பதும் ஒரு நாள் பணியும் அல்ல காடு முழுவதும் தேடி இனம் காணப்பட்டதும். மறுநாள் அந்த உயரத்திற்கேற்ப பொருட்கள் சேகரித்து மூன்றாம் நாளே அதனை கையில் பெறமுடியும்.
இவ்வாறு ஓர் இடத்தில் இனம் கானப்பட்ட தேன் எடுப்பதற்கு 4 பேர் மூன்று நாள் முயற்சியின் பயணாக 7 போத்தல் தேன் நேற்று எடுத்தோம்.
அதனை வீடு கொண்டு வரும் வழியில் நெடுங்கேணி வன இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர் காலையில் காடு சென்று உணவின்றி காத்திருந்து பெறப்பட்ட சொத்தே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிசாரையே நாடவேண்டும். என்றார். பொலிசில் சென்று அலைவதை விரும்பாது முறையிடப் படவில்லை.
உண்மையில் காட்டு மரங்களை நாம் அழிக்க வில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக தேன் எடுப்பதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். இது சட்டப்படியானது எனில் எம்மிடம் பறிமுதல் செய்யப்படும் தேன் நீதிமன்றத்தில் அல்லவா பாரப்படுத்த வேண்டும் . எனவும் கேள்வி எழுப்பினர்.

ad

ad