புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

வடக்கில் விகாரைகள் அமைப்பதில் தவறுதான் என்ன?கேட்கிறார் ஆளுனர்

வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கிராமத்தில் தமிழர் ஒருவரின் காணியை அடாத்தாக பிடித்துள்ள பௌத்த பிக்கு ஒருவர் அங்கு பாரிய விகாரையொன்றை அமைத்து வருகின்றார்.

தனது தந்தையின் பெயரிலுள்ள குறித்த காணியை மீட்டுத் தருமாறு காணிக்கு உரித்து டையவரான 60 வயதுடைய மணிவண்ணதாஸ் திருஞர்னசம்பந்தர் கோரிக்கை விடு த்திருந்தார்.

அவரது கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஆதரவு வெளியிட்டிருந்ததுடன் பௌத்த பிக்குவின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கொக்குளாய் விகாரை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதில் என்ன தவறு என அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்து கேட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் “இந்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எனக்கு நன்றாகவே தெரியும், அது தொடர்பில் நான் தேடி பார்த்தேன். அந்த விகாரை பிரதேச சபையின் அனுமதியுடனேயே அமைக்கப்படுகிறது. இது தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தகவல்களும் என்னிடம் காணப்படுகின்றன.

அந்த விகாரைக்கு அருகில் சுமார் 250 சிங்கள மீனவ குடும்பங்கள் வாழ்கின்றன. ஆகவே அவர்களின் மத உரிமையை மதிக்க வேண்டும். அது மாத்திரமன்றி வட மாகாணத்தில் மொத்தமாக 13 பௌத்த விகாரைகளே காணப்படுகின்றன.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோவில்கள் காணப்படுகின்றன. அது தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். கவலையடைய வேண்டிய அவசியமில்லை. யாழ்ப்பாணத்தில் பல கிறிஸ்தவ தேவாலயங்களும் காணப்படுகின்றன. இதுவே நிலைமை.“

ad

ad