புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

செப்டெம்பர் 13இல் தொடங்கும் 33ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்பில் இலங்கை குறித்த ஆவணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  33 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும்   செப்டெம்பர் மாதம்  13 ஆம் திகதி முதல்  30 ஆம் 
திகதி வரை ஜெனிவாவில்  நடைபெறவுள்ளது.
இந்த 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த  உத்தியோகபூர்வமான   அமர்வுகளோ விவாதங்களோ நடைபெறாவிடினும்  இலங்கை தூதுக்குழுவினால்  இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த  அறிக்கை ஆவணம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இது  தொடர்பான  ஏற்பாடுகள்  ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர்    ரவிநாத ஆரியசிங்க   தலைமையிலான தூதுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன்  33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில்  ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர்    ரவிநாத ஆரியசிங்க    உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad