புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

ஜெயகுமாரி மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு
ஒரு வருடங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜெயகுமாரிக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் இரண்டாவது தடவையாகவும் இன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16 ‘ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இரண்டாவது நாளாகவும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
யுத்தத்தின் போது தனது மூத்தப் புதல்வர்கள் இருவரும் கணவரும் உயிரிழந்த நிலையில் மூன்றாவது மகனான மகிந்தன் இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயுள்ள நிலையிலேயே ஜெயகுமாரி தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரது இளைய மகளுடன் கைதுசெய்யப்பட்டு மகளடமிருந்து பிரிக்கப்பட்ட ஜெயகுமாரி 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கு கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad