புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

இராணுவம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை-விக்னேஸ்வரன்

இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால்
அங்கே ஒழுக்கம் பாதிக்கப்படும்.
இராணுவம் என்பது நீதிபதிகளைப் போல் ஒதுங்கி இருக்கவேண்டும். அதைவிடுத்து மக்களுடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினால் பிரச்சனைகளே உருவாகும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வலிகாமம் வடக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து சொந்த வீடு இல்லாத மக்களுக்கு கீரிமலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டுத் திட்டத்தைப் பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
படையினர் வெளியேறவேண்டுமெனக் கோரிக்கை விடுபவர்கள், படையினர் செய்கின்ற தவறுகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் அவர்கள் செய்கின்ற சேவைகளுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால் அங்கே ஒழுக்கம் பாதிக்கப்படும்.
இராணுவம் என்பது நீதிபதிகளைப் போல் ஒதுங்கி இருக்கவேண்டும். அதைவிடுத்து மக்களுடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினால் பிரச்சனைகளே உருவாகும்.
மேலும், அவர்கள் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஏதாவது உதவிகளைச் செய்தால் அது வேற விடயம். அதில் பிரச்சனையில்லை. ஆனால் அதனைப் போரில் ஈடுபட்ட இராணுவம் செய்யமுடியாது.
அவை இரண்டையும் ஒரேவிதமாக பார்க்கவும் முடியாது. மேலும் இராணுவம் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். என்பதை நல்லவிதமாக பார்ப்பதற்கும் முடியாது.
இராணுவம் மக்களுக்கு பணத்தையோ, உதவிகளையோ செய்தால் அதனை நாங்கள் வாங்கிக்கொள்கின்றோம். அது அவர்கள் எமது மக்களுக்கு பல்லாண்டு காலமாக இழைத்த அநீதிகளுக்கான நட்ட ஈடாக மாத்திரமே இருக்கும்.
அதனை நாங்கள் மெச்சவேண்டுமென்றோ, அதற்கு நாங்கள் நன்றிக்கடனாக இருக்கவேண்டுமென்றோ எதிர்பார்க்கமுடியாது எனவும் தெரிவித்தார்.

ad

ad