செவ்வாய், ஜனவரி 30, 2018

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் புதிதாக ஆட்சியை அமைக்க
நேரிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்களின் ஆதரவும் இரு கட்சிகளும் தேவைப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக றை தோட்டம் நிவாசபிரிவு இலக்கம் 05 இல் நேற்று மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன் தற்போது ஆட்சியை தீர்மானிக்கு சக்தியாக தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரதேச சபைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதனால் நாம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த பிரதேச சபை பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளை நாங்கள் தான் உருவாக்கினோம் என சிலர் மக்களிடம் பொய்களை கூறி வாக்குகளை பெற்று வருகின்றனர்.

மலையகத்தை பொருத்தவரையில் பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி வகுத்த திட்டத்தின் ஊடாக செயல்படுத்தி வருகின்றது. அந்த செயல்திட்டங்களில் பாரியளவில் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து அபிவிருத்தியும் அடைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையில் தனி அரசாங்கம் அமைத்தக்கொள்ள போவதாக இரு கட்சி தலைவர்களிடத்தில் பேச்சுகள் இடம்பெறுகிறது.

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

ஆனால் இந்த இரு கட்சி தலைவர்களும் தனியாக அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தனியான ஆட்சியை நடத்த இருக்கின்ற 96 உறுப்பினர்களுடன் மேலும் பல உறுப்பினர்கள் வேண்டும் என்பதால் நாம் அவர்களுக்கும் அவசியமாவோம்.

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

பிரதமர் தனி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் எமது உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். இவ்வாறான நிலையில் நாம் சக்தியுடையவர்களாக இருக்கின்றோம்.

அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியை எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றியடைய செய்து மேலும் எமது சக்தியை உணரப்படுத்தவோம் என்றார்.