வெள்ளி, ஜனவரி 12, 2018

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் ஒளிமயமான எதிர்காலம்! - இஸ்ரோவுக்கு மோடி வாழ்த்து

இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, ‘இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இருந்த இஸ்ரோ மற்றும் அதில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு என் இதயங்கனிந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆண்டில் விண்வெளி தொழில்நுட்பங்களில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றியின் மூலம் இந்திய மக்களும், விவசாயிகளும், மீனவர்களும் பயனடைவார்கள். இச்ரோ தனது நூறாவது செயற்கைக்கோளை ஏவியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் அதன் மாபெரும் வளர்ச்சியையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் ஒளிமயமான எதிர்காலத்தையுமே குறிக்கிறது. இந்தியாவின் இந்த வெற்றியில் நமது உறுப்பினர்களுக்கும் பங்கு இருக்கிறது. ஏவப்பட்ட 31 செயற்கைக்கோள்களில் 28 செயற்கைக்கோள்கள் 6 நாடுகளுக்குச் சொந்தமானவை’ என பதிவிட்டுள்ளார்.