புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

வேட்பாளரை தாக்க முயன்ற கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுதலை!

கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது
கிளிநொச்சி- பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவர் ஈடுப்பட்டிருந்தார். அதன்போது அலுவலகத்திற்கு உள்நுழைந்து அவரைத் தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் c கிளிநொச்சி நீதவான் நீதின்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலைசெய்தது.
குறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பிரமந்தனாறு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்வும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச்fdvv மாதம் ஒத்தி வைத்துள்ளது.

ad

ad