புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

வெற்றிலைக்கு விடைகொடுத்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கின்ற நிகழ்வுகளில் அவரை வரவேற்பதற்கு இன்று முதல் வெற்றிலையை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்
தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுவான கூட்டங்களில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அவரை வரவேற்பதற்காக இதுவரைக் காலமும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வந்தது. பௌத்த மக்களின் பொதுவான சம்பிரதாயமாக வெற்றிலை ஒரு வரவேற்பு மற்றும் கௌரவப் பொருளாக நோக்கப்படுகின்றது.
அதேவேளை, வெற்றிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமாகவும் காணப்படுகின்றது. இந்த நிலையில் வெற்றிலையை பயன்படுத்தினால் அதுவும் சுதந்திரக் கட்சிக்கு பிரசாரமாக போய்விடும் என்ற சிறு காரணத்தைக் கொண்டு இனிவரும் நிகழ்வுகளில் வெற்றிலையை பயன்படுத்தாமலிருக்க மஹிந்த அணி முடிவெடுத்திருக்கின்றது. வெற்றிலைக்குப் பதிலாக இனிவரும் காலங்களில் தாமரை மொட்டுக்களை பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ad

ad