புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

மைத்திரி இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் – கபே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று கபே சார்பில் முன்னிலையான சட்டவாளர், கிரிஷ்மல் வர்ணசூரிய,
”அரசியலமைப்பின் 30.1  பிரிவு மற்றும் 19 ஆவது திருத்தம் என்பனவற்றின் கீழ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 5 ஆண்டுகளே பதவி வகிக்க முடியும்.
அரசியலமைப்பின் படி, அவரது பதவிக்காலம், வரும் 2019 டிசெம்பர் 8ஆம் நாளுடன் முடிவடைகிறது.
பதவிக்காலம் முடிவடைவதில் இருந்து 30 நாட்களுக்கு முன்னதாக அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் 1099 நாட்களை சிறிலங்கா அதிபர் ஏற்கனவே கடந்து விட்டார். அவர் இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்

ad

ad