தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

புலிகள் மீதான தடையை 6 மாதங்களுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக- குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய ஓன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளால் தொடர்ந்தும் ஆபத்து உள்ளது என்பதை ஐரோப்பிய ஓன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளோம் என பிரசல்ஸிற்கான இலங்கையின் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் தொடர்ச்சியாக சந்திக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் கருத்துக்களை அதிகாரிகள் உரிய வடிவத்தில் பின்பற்றுவதை தூதரகம் உறுதி செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் மார்ச் மாதம் ஐரோப்பிய கவுன்சில் மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.