புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2018

கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின்
தலை­வர் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் செயற்­பாடே கார­ணம் என்று, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லா­ளர் நாய­கம் வீ.ஆனந்­த­சங்­கரி குற்­றம் சுமத்­தி­யுள்­ளார்.

‘மிக ஆபத்­தான விபத்­தில் சிக்கி முள்­ளந்­தண்டு உள்­பட பல சத்­திர சிகிச்­சை­களை செய்து விரை­வாக தேறிக்­கொண்­டி­ருந்த எமது கட்­சி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­ல­க­சிங்­கம், சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் முட்­டாள்­த­ன­மான செயற்­பாட்­டால் திடீ­ரென உயி­ரி­ழந்­தார்’ என்று ஆனந்­த­சங்­கரி குறிப்­பிட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளதாவது: தமி­ழர் விடு­தலை கூட்­டணி தலை­வரை நான் தாக்க முற்­பட்­டேன் என்­றும், முக்­கிய கூட்­டத்துக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என்­றும் உண்­மைக்கு மாறான பல விட­யங்­களை அவர் கூறி­ய­தாக பல்­வேறு ஊட­கங்­கள் மற்­றும் சமூ­க­ வ­லைத்­த­ளங்­க­ளி­லும் வெளி ­வந்த செய்தி உண்­மைக்கு புறம்­பா­ன­தா­கும்.

பொ.சிவ­குல தில­க­சிங்­கத் துக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கா­க­வும், இறு­திச் சடங்கு ஒழுங்­கு­கள் பற்­றி­யும் மட்­டுமே அன்­றைய செயற்­குழு கூட்­டம் கட்­சி­யின் உப தலை­வர் சோம­சுந்­த­ரம் தலை­மை­யில் அவ­சர அவ­ச­ர­மாக கூட்­டப்­பட்­டது. அந்த நேரத்­தில் தலை­வர் சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் நியா­யப்­ப­டுத்த முடி­யாத வரவு அனை­வ­ருக்­கும் ஆச்­ச­ரி­யத்தை கொடுத்­தது.

சிவ­சுப்­பி­ர­ம­ணி­ யத்­தின் அலை­பேசி உரை­யா­ட­லின் தாக்­கமே கடும் சிகிச்­சைக்கு ஆளாகி விரை­வாக தேறிக்­கொண்­டி­ருந்த கட்­சி­யின் மூத்த உப தலை­வ­ரின் திடீர் உயி­ரி­ழப்­புக்கு கார­ண­மாக அமைந்­தது. இத­னால் மிக­வும் சோகத்­தில் இருந்த எமது செயற்­குழு உறுப்­பி­னர்­கள், இவ­ரு­டைய போக்­கில் மிக­வும் வெறுப்­ப­டைந்­தி­ருந்­த­னர்.

கடந்த ஆறு­மாத கால­மாக இவ­ரு­டன் கட்சி எது­வித தொடர்­பும் கொண்­டி­ருக்­க­வில்லை. இவர் மீது சில சந் தேகங்­கள் இருந்­த­மை­யால் இவரை நாம் எந்த நிகழ்­வுக் கும் அழைக்­க­வில்லை என்­பதே உண்மை. இவர் கூட்­டத்துக்கு சமு­கம் கொடுத்­தமை திட்­ட­மிட்ட ஓர் செயல் என நான் கரு­து­கின்­றேன். இவரை நானே வெளி­யே­று­மாறு பணித்­தேன். அவர் மறுத்­த­மை­யாலே, நிர்­வாக சபை உறுப்­பி­னர்­களே அவரை வெளி­யில் அனுப்பி வைத்­த­னர்.

இவர் மீது என்றோ எடுத் திருக்க வேண்­டிய நட­வ­டிக்கை, நிர்­வாகக் குழு­வின் தீர்­மா­னத்துக்கமைய விரை­ வில் பொதுச் சபை­யில் எடுக்­கப்­ப­டும். இந்த விட­யத்­தில் என் தலை­யீடு இல்­லா­தி­ருந்­தி­ருந்­தால் இவ­ரின் அன்­றைய நடத்தை பெரும் விபரீதத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும். குறித்த சம்­ப­வங்­கள் அனைத்­தும் எமக்கு மகிழ்ச்சி தரும் விட­ய­மல்ல – என்­றுள்­ளது

ad

ad