03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஆகஸ்ட் 16, 2018

நாடாளுமன்றில் சாதனை படைத்த இரு தமிழர்கள்..


கடந்த மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 24 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு தொடர்பான பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 224 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மாத்திரமே 24 நாட்களும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர். மேலும்இ 24 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்து நாமல் ராஜபக்ஸ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் மோசமான சாதனை படைத்துள்ளனர்.ஆனால் 24 நாட்களும் வந்து சாதனை படைத்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் எம்.பிக்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் உள்ளனர்.

மேலும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் 23 நாட்கள் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது