புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2018

மஹிந்தவிடம் நாளை விசாரணை!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாளை காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார் என்று இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் ஏன் சி.ஐ.டிக்கு சென்று வாக்குமூலம் அளிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகமாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி விசாரணை செய்யப்பட இருப்பது குறித்து வினவப்பட்டது. அவர் வீட்டில் வைத்து விசாரிக்கப்பட இருக்கிறாரா? சி.ஜ.டிக்கு அழைத்து விசாரிக்கப்பட இருக்கிறாரா என இதன் போது வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், கீத் நோயார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கும் பதில் வழங்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்த சம்பவத்தில் பல இடங்களில் அவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவருக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு இருந்தது என்று எனக்குத் தெரியாது.

பிணைமுறி விசாரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அதே போன்று இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அவருக்கு அங்கு சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ad

ad