03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஆகஸ்ட் 23, 2018

பலாலியில் இருந்து விமான சேவை - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

பலாலயிலிருந்து நேரடியாக தமிழ்நாட்டுக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று, புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியிலிருந்து நேரடியாக தமிழ்நாட்டுக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று, புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுப்பதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகும் என புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை செய்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து, தமிழ் நாட்டுக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில், விமான நிலையத்தை கண்காணிப்பதற்காக மூவர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவொன்று பலாலிக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.