புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2018

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவாஜிலிங்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று எதற்காக போராடுகிறீர்கள்? என சிவாஜிலிங்கத்திடம் கேட்டேன். இதற்கு பின் எனது நண்பர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறினார்கள். ஆனால் சிவாஜிலிங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என எனக்கு நம்பிக்கையுள்ளது. இன்றைய நிகழ்வுக்கும் அவர் வந்திருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி" என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

ad

ad