03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, செப்டம்பர் 01, 2018

இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்’ - ஓ.பன்னீர்செல்வம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களோடு தினகரன் அணி அரசியலில் இருந்தே காணாமல்
போய்விடும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம்
நெல்லை மாவட்டம், சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமம் உள்ளது. 18-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னரான பூலித்தேவன், ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுப்பு தெரிவித்து சுதந்திர தாகத்துக்கான முதல் கலகக்குரலை எழுப்பினார். அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று அரசு சார்பாக விழா நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவு இல்லத்தில் இன்று அவரது 303-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பூலித்தேவனின் வாரிசுகள் சார்பாகப் பால்குடம் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. பின்னர், பூலித்தேவனின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பாகத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் பூலித்தேவன் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 303-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அமைச்சர் பெருமக்களோடு அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அரசு விழா எடுக்கப்பட்டு வருகிறது. அவர் வாழ்ந்த இந்த நெற்கட்டும்செவல் ப