புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2018

20 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் கட்டி வந்த இந்தியர் கட்டுநாயக்கவில் கைது

15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை, பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை 6.30 மணியளவில், துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த இந்தியர் ஒருவர், 20 கிலோ தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், இந்தியாவைச் சேர்ந்த 47 வயதான போசாலே தர்மராஜ் கங்காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தலா ஒரு கிலோ எடையுள்ள 20 தங்கக் கட்டிகளை தனது உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் போதே , கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ad

ad