தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது உறவினரும் கட்சி நிர்வாகிகளில் ஒருவருமான சுதீஸ் கூறுகையில், வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுதீஸ் பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்