புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2018

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் குற்றங்களை மறைக்க அறிவிலித்தனமாக செயற்படுகிறார்: ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு


 

 

 

 

குற்றச்சாட்டு

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தனது குற்றங்களை மறைப்பதற்கு அவசரப்படுவதானது அறிவிலித்தனமானது என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில், சமுர்த்தி தொடர்பான குற்றச்சாட்டு பொய்யானது என பெரியகுளம் கிராம அபிவிருத்தி சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பிரதேச செயலாளர் தொடர்பாக 73 குற்றச்சாட்டுக்கள் எனக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், ஆதாரங்கள் உள்ள 55 குற்றச்சாட்டுக்களையே நான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும், கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் கையளித்துள்ளேன்.
இந்த குற்றச்சாட்டுக்களில் 5 விடயங்களை நான் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டமைக்கு, என்னிடம் ஆதாரம் இல்லை எனவும், என்னால் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என கூறப்பட்டமையுமே ஆகும்.
அவற்றில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக 3 கேள்விகளை கேட்டுள்ளேன். சமுர்த்தி வங்கிகளின் பூரண கணக்கறிக்கை மற்றும் பெரியகுளம் கிராமத்தில் சமுர்த்தி மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், அதற்கு எவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கின்றீர்கள் என கேள்விகளை கேட்டிருந்தேன்.
அதற்கான பதிலாக 2 கேள்விகளுக்கு 14 நாட்களில் பதில் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். அதில் பெரியகுளத்திற்கான மாதிரி கிராம விடயமும் உள்ளடங்கியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கும் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சமுர்த்தியின் இவ்வாறான வேலைத்திட்டத்தினை செய்வதற்கு சமுர்த்தி சங்கமுள்ளது. சமுர்த்தி சங்கத்தினூடாக இதனை செய்யாவிட்டால் அதில் ஏதோ முறைகேடு உள்ளது. இதற்கும் அப்பால் பொதுமக்கள் இன்றும் சாட்சி சொல்வதற்கு தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் நெடுங்கேணிக்கு வந்து பிரதேச செயலகத்தில் கலந்துரையாடியதன் பின்னர் பிரதேசசபையில் பத்திரிகையொன்றில் வந்த எனது அறிக்கையொன்றை பார்வையிட்டுவிட்டே அவர்கள் வவுனியா சென்று ஊடகத்தினை சந்தித்துள்ளனர்.
சில கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிரதேச செயலகங்களுடன் அங்குள்ள சில அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக தனிப்பட்ட தொடர்புள்ளது. அவ்வாறான சங்கமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
இது பிரதேச செயலாளர் மீண்டும் மீண்டும் தனது குற்றங்களை மறைப்பதற்கு சாத்தியப்படாத விடயத்தினை செய்ய முற்படுகின்றார். இவ்வாறு பிரதேச செயலாளர் அவசரப்படுவதானது இந்த விசாரணைகளை தடுப்பதற்கு அறிவிலித்தனமாக செயற்படுவதாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளா

ad

ad