வெள்ளி, அக்டோபர் 26, 2018

அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின்  பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான
சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.