புதன், அக்டோபர் 24, 2018

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களிற்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக
கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
அடை மழையின் மத்தியிலும் குறித்த போராட்டம் தொடர்ந்து சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்