புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 அக்., 2018

கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ


கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோகற்பழிப்பு புகாருக்கு ஆளான பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் புகழ் பெற்ற வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 34). இவர் மீது கேத்தரின் மயோர்கா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில், கடந்த 2009ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் ஓட்டல் ஒன்றின் அறையில் ரொனால்டோ தன்னை கற்பழித்தார் என கூறியுள்ளார். நான் வேண்டாம் என தொடர்ச்சியாக அலறினேன் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ரொனால்டோ மற்றும் கேத்தரின் ஒன்றாக ஆடுவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ரொனால்டோ அளித்துள்ள பேட்டியில், கால்பந்து ஆடும்பொழுதும், பொது வாழ்க்கையிலும் நான் 100 சதவீதம் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். இது எனக்கு தெரியும். அதனால் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனிதன். ஒரு சிறந்த அணியில் விளையாடுவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என கூறினார்.

எனது வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். நானும் கூட. கால்பந்து விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். என்னுடைய வாழ்வில் நலம் விரும்பும் மக்களை நான் கொண்டுள்ளேன். நிச்சயம், உண்மை முதல் இடத்தில் வந்து எப்பொழுதும் நிற்கும். அதனால் நலமுடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.ரொனால்டோ மற்றும் கேத்தரின் ஒன்றாக ஆடுவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ரொனால்டோ அளித்துள்ள பேட்டியில், கால்பந்து ஆடும்பொழுதும், பொது வாழ்க்கையிலும் நான் 100 சதவீதம் எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.  இது எனக்கு தெரியும்.  அதனால் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனிதன்.  ஒரு சிறந்த அணியில் விளையாடுவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என கூறினார்.

எனது வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  நானும் கூட.  கால்பந்து விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்.  என்னுடைய வாழ்வில் நலம் விரும்பும் மக்களை நான் கொண்டுள்ளேன்.  நிச்சயம், உண்மை முதல் இடத்தில் வந்து எப்பொழுதும் நிற்கும்.  அதனால் நலமுடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.