24 அக்., 2018

விக்னேஸ்வரனின் புதிய அரசியல் பயணம் இன்று ஆரம்பம்! புதிய கட்சியின் பெயரையும் அறிவிப்பார்

வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்
புதிய அரசியல் பயணம் ஒன்றை மேற்கொள்ள வடமாகாண மக்கள் தயாராகின்றனர். மூன்று சொற்களைக் கொண்ட புதிய கட்சியின் பெயரை இன்று விக்னேஸ்வரன் அவர்கள் அறிவிக்கவுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகவுள்ள விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்கூடலில் தனது அரசியல் பயணம் குறித்த முழுமையாக விளக்கத்தை அளிக்கவுள்ளார். புதிய கட்சியின் பெயர் மற்றும் அவருடன் இணைந்து செல்வோரையும் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் எதிர்வரும் தேர்தல் எத்தைகைய தேர்வில் போட்டியிடுவது தொடர்பிலும் விளக்கம் அளிக்கவுள்ளார்.
அத்துடன் தனது அரசியல் பயணத்திற்கு முழுமையான ஆதரவை வழக்குமாறு ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்களிடம் அவர் அறைகூவல் விடுக்கவுள்ளார். அவரின் முழுமையான அரசியல் பயணம் தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தி தொடரவுள்ளதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.