வெள்ளி, அக்டோபர் 26, 2018

பிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு
, கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந் நிலையில் மஹிந்தவின் வருகையை எதிர்ப்பார்த்து வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனையோர் விஜயராம மாவத்தை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.