புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2018

பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதவர்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்

எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதியட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
WWW.doenetd.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி நிறைவடையவுள்ள இந்தப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்கள் ஊடாக நடைபெறவுள்ளது.
அத்துடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள 233791 தனிபட்ட பரீட்சார்த்திகளின் அனுமதியட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது

ad

ad