புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2018

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது

இன்று மட்டக்களப்பில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் குடும்பங்களுக்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரான்ஸில் இயங்கும் அனைத்துலக மனித உரிமை சங்கம் ஊடாக பிரான்ஸ் பாரிசில் வசிக்கும் பாலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இந்த அன்பளிப்புப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இதில் பத்து மிதிவண்டியும் மற்றும் பாடசாலை கல்வி கற்கும் உபகரணங்களும் மற்றும் வறுமை கோட்டில் உள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும் வழங்கி வைத்தனர்.தேசிய தலைவர் பிரபாகரனின் 26 11 2018 அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.

பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு பொருட்களை வழங்கிய உறவுகளுக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த நேரத்தில் தேசியத் தலைவரின் அகவையை முன்னிட்டு அங்கு மாணவர்கள் குதப்பி வெட்டிகொண்டாடினார்கள்

அங்கு வந்த ஒருவர் கூறுகையில் தாங்கள் குடும்பமாக செய்யும் தொழில் சட்டி பானை ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சட்டி பானை எல்லாம் நனைந்து மண்ணோடு மண்ணாக கரைந்து விட்டது என்று தங்களுக்கு நட்டம் ஏற்பட்டது என்றும் தற்சமயம் தாங்கள் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள் .கடவுளை போல் வந்து தொடர்பு கொண்டு இந்த உணவுப் பொதிகளை தந்ததற்கு நன்றி கூறினார்கள் இதேபோல் எங்களுக்குத் தெரியாமல் எத்தனை உறவுகள் பசியோடு இருப்பார்கள் எங்களால் முடிந்த அளவு அவர்களுக்கு ஒரு சிறு துளியாவது சென்றடைவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

இந்தவேளையில் பரிசில் இருந்து உதவி வழங்கிய பாலனுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் அனைத்துலக மனித உரிமை சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது

ad

ad