முன்னதாக நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனுனின் நினைவிடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் சுடரேற்றி அஞ்சலித்த கே.சிவாஜிலிங்கம் பின்னர் காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர் துயிலுமில்லம் முன்பதாக குவிந்திருந்த படையினர் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்க்க தனது ஆதரவாளர்கள் சகிதம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்