திங்கள், மார்ச் 04, 2019

மதவெறியில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துக


மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வளைவு கிறிஸ்தவர்களால் உடைத்தெறியப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மத தீவிரவாத கிறிஸ்தவக் கும்பல் ஒன்று இத்தகைய அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றது.

111

இந்தக் காட்டுமிராண்டித்தன செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸார் இந்த விடயத்தில் இனியாவது நேர்மையாகக் செயற்படவேண்டும்.

சம்பவம் இடம்பெற்றமை தொடர்பாக மக்களால் அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அங்கு செல்லாமைக்கு பொலிஸ் திணைக்களம் விளக்கமளிக்கவேண்டும்.

111

மதவெறி பிடித்த கிறிஸ்தவக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டபோது அங்கு நின்ற கிறிஸ்தவ மதகுரு மௌனம் காத்தமைமை மனவருத்தத்திற்கு உரியது. ஆவர் உண்மையான குருவா அல்லது வன்முறையாளரின் தலைவனா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

மன்னாரில் தொடர்ச்சியாக ஆங்காங்கே இதுபோன்ற கிறிஸ்தவ மதவாதம் தலைதூக்கி வருகின்றமை தொடர்பாக மன்னார் ஆயர்; இல்லம் நடவடிக்கை எடுத்திருந்தால் நிலமை இந்தளவிற்குச் சென்றிருக்காது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

111

மதத் தலைவர்கள் உடனடியாகத் தலையிட்டு அதே இடத்தில் வளைவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவேளை, வன்முறைக் கும்பல் வளைவை உடைத்தபோது எந்தவித எதிர்வினைகளிலும் ஈடுபடாமல் அமைதி காத்த சைவத்தமிழர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

எண்ணிக்கையில் அதிகமாக உள்ள சைவத் தமிழர்கள் நினைத்திருந்தால் அங்கு பெரும் கலவரமே வெடித்திருக்கும்.

111

ஆனால், அவர்களின் பொறுமை உயர்ந்த மனிதப் பண்பை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களை விமர்சியுங்கள். ஆனால், உண்மை–நேர்மையான–கிறிஸ்தவர்களின் மனம் புண்படத்தக்க வகையில் கருத்துக்கள் பதிவிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.