புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2019

“7 தொகுதிகளை கேட்பதாக தகவல்” பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் இருப்பார் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் இருப்பார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.

மார்ச் 1-ந் தேதியை தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்தது.

தி.மு.க.வின் கெடு முடிவடைந்த நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடந்த 2 நாட்களாக தே.மு.தி.க. அலுவலகத்தில் கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன், அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை தே.மு.தி.க.வின் உயல்நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

7 மக்களவைத் தொகுதிகளை அதிமுகவிடம் தேமுதிக கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 மக்களவை தொகுதிகளை பெறுவதில் தேமுதிக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தோம். வாழ்த்துகளைத் தெரிவித்தோம். எங்களிடம் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் பேசினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு எட்டப்படும். 6-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார்.

ad

ad