புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2019

சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2019


ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் பெண்களுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதனால் முக்கியத்துவம் பெறுகின்றது.
வரலாறு.

முதன் முதலில் 1789 ஆம் ஆண்டு சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்களும் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க தெருக்களிலும் உழைக்கும் பெண்கள் தமது உரிமைகளுக்காக கொதித்தெழுந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

தமிழ் தேசமும் பெண்கள் எழுச்சிநாளும் ஒக்டோபர் 10, தமிழ் தேசப் பெண்கள் எழுச்சி நாள்

தமிழ் தேசத்தின் இருப்பை அழிப்பதற்கான ஓர் ஆயுதாக பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஸ்ரீலங்கா அரசு கைக்கொண்டது. இதனை தனது இராணுவ இயந்திரம் ஊடாக அரங்கேற்றி வந்தது. இத்தகைய இராணுவ வன்முறைகளும், தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த பெண் அடிமைத்தனமும், எமது தேசத்துப் பெண்களை பல தசாப்தங்களாக அடுப்பங்கரையில் முடக்கியிருந்தது.

1983 – 2009 வரை தமிழ் தேசத்துப் பெண்கள் தம்மீது ஸ்ரீலங்கா அரசும், அதன் இராணுவமும் கட்டவிழ்த்து விட்டிருந்து அடக்குமுறைகள், பொருளாதாரத் தடைகள், பாலியல் வன்கொடுமைகள் என்பவற்றிற்கு எதிhக பேரணிகளை நடாத்தியதுடன், போராட்டங்களிலும், போரிலும் ஈடுபட்டனர்.

இந்த அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு எழுச்சிபெறும் நாளாக தமிழ்த் தேசத்துப் பெண்கள் எழுச்சிநாள் அமைந்துள்ளது.

தமிழ் தேசத்தின் உழைக்கும் பெண்கள் மட்டுமல்ல அனைத்துப் பெண்களும் ஸ்ரீலங்கா அரசின் இன ஒடுக்கு முறையினாலும், சமூகதிலுள்ள ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறைகள்,சமய வேறுபாடுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், சீதனக் கொடுமை போன்ற ஒடுக்குமுறைகளாலும் கொடூரமாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையிலிருந்த பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறைகள்,பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் அடிமைத்தனம் என்பன மிகப் பெருமளவில் தடுக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு சரிசமமாக தேச கட்டுமானப் பணியில் ஈடுபடும் நிலை காணப்பட்டது. சுமார் இரண்டு தசாப்பதங்கள் தமிழ் தேசப் பெண்கள் வாழ்வில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசத்தினதும் எழுச்சி மிகு பொற்காலமாக விளங்கியது.

இன்றய நிலையில் தமிழ் தேசத்தின் அரசியல் அங்கீகாரம் இல்லாது தமிழ்ப் பெண்கள் ஆணாதிக்கம் மற்றும் சாதிய, சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட ஸ்ரீலங்கா அரச இயந்திரம் ஒருபோதும் இடமளிக்காது என்பதும் உணரப்பட்டுள்ளது.

இன்று தமிழ் தேசத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பனஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள தேசம் கருதுவதனாலும், இவ்வழிப்பை செய்து முடித்துவிடலாமென அவர்கள் நம்புவதனாலும் இவ் அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இவ் இன அழிப்பைத் தடுப்பதற்கான தற்காப்புப் போராட்டமேயாகும். தமிழ் மீனவர்களும், தமிழ் விவசாயிகளும், தமிழ் தொழிலாளர்களும் இவ் இன அழிப்பினால் மிகவும் துன்பப்படுகின்றனர்.

கடந்த கால யுத்தத்தினால் சுமார் தொண்ணூறாயிரத்திறகும் அதிகமான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளபோதும் அவர்களுக்கான நீதி இன்று வரை மறுக்கப்பட்டள்ளது.

இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் கைது செய்யப்பட்டும், கடத்தபட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும், கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளதும் உறவினர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீதிகளில் இருந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடுபவர்களில் 99 வீதமானோர் பெண்களாகவே உள்ளனர்.இவர்களுக்கான நீதியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

யுத்த காலத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கான நீதி மறுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்ட ருவண்டாவுக்கான சிறப்பு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது திட்டமிட்ட வகையில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வல்லுறவு (rape) மற்றும் பாலியல்; துஸ்பிரயோக (sexual abuse) குற்றங்கள் இனப்படுகொலையாக கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகின்றது.

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக்கு இன்று வரை சிறிலங்கா அரசு பொறுப்புக் கூறவில்லை.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படாமையினாலும், கடற்தொழிலில் அரச ஆதரவுடன் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளாலும் மீன்பிடித் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்து சூழ்நிலையிகளாலும் தமிழ் பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நடாத்தும் இந்த எழுச்சி மிக்க பெண்கள் மாநாடானாது தமிழ்த் தேசத்தின் மீதான இனப்படுகொலைக்கு நீதி, தமிழ் தேசத்தின் அரசியல் அங்கீகாரம், தமிழ் தேசப் பெண்கள் ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபட வலுச்சேர்த்தல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு

பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகின்றோம்.

1

1)வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்,தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி கிடைக்கவும், தமிழர் தேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வல்லுறவு (rape) மற்றும் பாலியல்; துஸ்பிரயோக குற்றங்களுக்கு நீதி கிடைக்கவும்,

ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதி மன்றின் மூலம் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.

அதற்கு மாறாக சர்வதேச கண்காணிப்பை நீடித்தல் என்ற போர்வையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்னுமொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு கால அவகாசத்தை வழங்குவதானது தமிழ் மக்களுக்கான நீதியை மறுப்பதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறிவதற்கான வாய்ப்பையும் மறுப்பதாகவும் அமையும் என்பதனையம் சுட்டிக்காட்டுகின்றோம்.

8

2) தாயகம், தேசம், சுயநிர்ணயம், தமிழ்த் தேசித்தின் தனித்துவமான இறைமை, என்பவற்றின் அடிப்படையில் இலங்கை நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்படுவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும்.


3 )ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குசிறிலங்கா அரசு உறுதியளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அச்சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.

8

4) போரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர்களின் கல்வி பொருளாதாரம் மற்றம் அவர்களின் உடல் உளநலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுபதில் எமது அரசியல் இயக்கம் அக்கறை கொள்ளும்.

2

5) தமிழ் பெண்கள் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை பாதுகாப்பாகவும், முழுமையாகவும் அனுபவிப்பதில் இராணுவ மயமாக்கல் தடையாக உள்ளதுடன்,தமிழர் தாயகத்தின் மீது இன அழிப்பை மேற்கொண்டு, தாயகத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறிலங்கா ஆயுதப்படைகளின் முற்றாக வெளியேற வேண்டுமென குரல் கொடுப்போம்.

3
6) சமூக பண்பாட்டு ஒடுக்குமுறைகளிலிருந்து பெண்களை விடுவிக்க பாடுபடுதல். எமது சமூகத்தில் பெண்கள் 52 வீதமாக உள்ளனர். எனினும் அவர்கள் சமூக பண்பாட்டு ரீதியாகவும், இன ஒடுக்கு முறையாலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை சீதன கொடுமை , பாதுகாப்பின்மை , பாரபட்சம் போன்ற ; பல்வேறு வகையில் ஒடுக்கப்படுகின்றனர், இவ்வாறனான நிலைமைகளை கண்டறிந்து தீர்க்கக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்தல்.

5

7) அந்த வகையில் எமது அரசியல் இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்புக்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எதிர்வரும் 10 ஆண்டுக்குள் 50 வீதமாகவும்,அதன் ஆரம்ப நடவடிக்கையாக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 25 வீதமாகவும், உயர்த்துவதனை இலக்காகக் கொண்டு செயற்படுதல்.

7

8) தேசவழமை சட்டத்தில் தமிழ் தேசத்தில் பெண்களின் பால்நிலை சமத்துவத்தினை பாதிக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ள செயற்படுவோம்.

9) எமது அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் சமூகத்தில் பெண்கள் சிறுமிகளின் உரிமைகளையும் கௌரவத்தையும் பேணிப்பாதுகாத்து செயற்படுபவர்களாக இருத்தல் வேண்டும். பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளில் எமது அமைப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான பொறிமுறைகள் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உருவாக்கப்படுவதுடன் பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இயங்குவதற்காக உழைத்தல்,

8

10) எமது தேசத்தில் 18 வயதிற்குக் குறைந்த இளவயது திருமணங்களை நடைமுறையிலிருந்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

8

11) இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எமது இயக்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் எனவும் உறுதி கூறுகின்றோம்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ad

ad