புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2019

வடக்கிற்கு பதில் மாத்தறையில் அமைக்கப்பட்ட‌ காணாமல் போனோருக்கான செயலகம்


காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கும் செயல்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு, காணாமல் போனோருக்கான செயலகத்தை உருவாக்கியது.

இந்தச் செயலகம், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், தென்பகுதியிலுமாக, மொத்தம் 12 கிளை செயலகங்களை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் முதலாவது கிளைச் செயலகம் நேற்று முன்தினம் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டது. இதனை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய திறந்து வைத்தார்.

அதேவேளை, இன்னொரு கிளைச்செயலகம், மன்னாரில் இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. காணாமல் போனோருக்கான செயலகம் உருவாக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலையில், இந்த கிளைச் செயலகங்கள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

ad

ad