www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மார்ச் 04, 2019

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்



மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய ககட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் தாம் திமுக கூட்டணியில் இருப்பதாகவும், சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். எனவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி நிச்சயம் சிதம்பரம் தொகுதியாகத் தான் இருக்கும். மற்றொரு தொகுதியாக விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நாளை மாலைக்குள் அனைத்துக் கூட்டணி கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.