வியாழன், ஆகஸ்ட் 08, 2019

சூறைக்காற்றில் பறந்த வீட்டுக் கூரைகள்

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளத்தில் ஒரு வீடும் பெரிய புளியங்குளத்தில் ஒரு வீடும் முதலியார் குளத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடும் நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடும் என மொத்தமாக 6 வீடுகளின் கூரைப் பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. ஏ-9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து விழுந்து கார் ஓன்றும் சேதமடைந்துள்ளது