8 ஆக., 2019

கோட்டாவுடன் இரகசிய சந்திப்பில் சித்தாத்தன்-

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் சந்தித்து இரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பது தொடர்பில் பரஸ்பர பேச்சுக்களும், கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சித்தாத்தன் கோட்டபாய ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளார்.

ஒரு மணித்தியாலம் நடைபெற திட்டமிட்டிருந்த இச் சந்திப்பு பேச்சுவார்த்தை நீடித்த காரணத்தினால் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை நீடித்திருந்தது.


இருப்பினும் அந்த 3 மணித்தியாலங்களாக இருவரும் பேசிக் கொண்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை கூற இருவரும் மறுத்து வருகின்றனர்