8 ஆக., 2019

சிறிதரனுக்கு டக்ளஸ் சவால்

தன்மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென நிரூபிக்க முடியுமானால், நீதி விசாரணையை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

“ வெறுமனே கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் உங்களுடைய அரசு, நீங்கள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள், அதை வைத்து ஏன் எம் மீதான ஒரு நீதி விசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 31.07.2019 திகதி தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.