புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2020

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்ஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளா
ன வாகனங்களும் தீயில் நாசம்
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் மரணமடைந்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.
தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முன்னைய செய்தி.........
வவுனியா - ஓமந்தை பன்றிகொய்தகுளம் பகுதியில் இன்று (23) இரவு சற்றுமுன் பேருந்து - வான் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 19 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தை அடுத்து விபத்துக்கு உள்ளான பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பேருந்து இந்த விபத்தை அடுத்து தீ வைத்து தீக்கிரையாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
எனினும் பொலிஸ் தரப்பினர் அதனை இதுவரை உறுதி செய்யப்பயவில்லை. விபத்தில் பின்னர் பேருந்து தீப்பிடித்தது என்று பொலிஸ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ad

ad