புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2020

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்கம் 34 ஷரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


கொழும்பு மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இந்த இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு வழங்க முடியுமா என்பதை ஆராய மரண தண்டனை விதித்த மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜனாதிபதி அறிக்கைகளை பெறவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ad

ad