புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2020

60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாமல் போகும் நிலைமை

எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் 5 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் கலைப்பதனாலேயே 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 - 17ஆம் திகதியில் பொது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றம் மே மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால் அதனை பெற்றுக்கொள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

ad

ad