புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2020

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள்

இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன.

பிரித்தானியா, சுவிஸ்,கனடா ஆகிய நாடுகளில் உள்ள சட்டவல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் முதற்கட்ட பொறிமுறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுவழக்கறிஞர் ஒருவர் ஊடாக குற்றவியல் நீதிமன்றத்தினை நாடுவதற்குரிய நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு மாத காலத்திற்கு முன்னதாக பொதுவழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை விடயத்தினை நகர்த்தவது தொடர்பில் கனடா, சுவிஸ் மற்றும் பிரித்தானியாவில் உள்ள சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து பொறிமுறைகளை தயாரிக்கும் செயற்பாடுகளை குறித்த புலம்பெயர் அமைப்புக்கள் முன்னெடுத்த வண்ணமுள்ளன.

அத்துடன் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமாச்சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு போன்றவற்றுக்கான சான்றுகளையும் சேகரிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ள இப்புலம்பெயர் அமைப்புக்கள் குற்றவியல் நீதிமன்றை நாடும்போது தமது மனுத்தாக்கலுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவே இந்த செயற்பாட்டினை கையிலெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு உத்தியோக பூர்வமாக தீர்மானித்து இந்த அறிவிப்பினை நாளை ஆரம்பமாகும் 43ஆவது கூட்டத்தொடரில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினுள் மட்டுப்படுத்தி வைப்பதனால் எவ்விதமான பயனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு மேற்படி புலம்பெயர் அமைப்புக்கள் வந்துள்ளன.

இந்நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் செய்வதற்குரிய அழுத்தங்களை வழங்குவதற்கு போதிய அதிகாரம் ஜெனீவா அரங்கிற்கு காணப்படாமையினால் இலங்கை விவகாரத்தினை மனித உரிமைகள் பேரவையினுள் முடக்குவதானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் தாமதங்களே நீடிக்கும் சூழலையே ஏற்படுத்தும் என்பதன் காரணமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் முன் நிறுத்துவதற்கு முயற்சிகளை அப்புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து எடுத்திருந்தன.

எனினும் பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தமுடியும் என்ற முதலாவது முறைமை ஆராயப்பட்டபோதும் அதற்கு வீட்டோ அங்கீகாரத்தினைக் கொண்டிருக்கும் சீனா, ரஷ்யா இலங்கை அரசின் சார்பாக தீர்மானங்களை எடுக்கின்றபோது அம்முயற்சிகள் வெற்றியளிக்காது என்று கருதி கைவிடப்பட்டது.

அடுத்து, ரோஹிங்கியா விவகாரத்தில் மியன்மாருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றின் முன் சாட்சியங்களுடன் அவ்விடயத்தினை கம்பியா நாடு முன்மொழிந்தமையை பின்பற்றி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களின் சாட்சியங்களை திரட்டி சர்வதேச நாடொன்றின் மூலமாக குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வது பற்றி ஆராயப்பட்டது.

எனினும் அந்த செயற்பாடு உடனடியாகச் சாத்தியமாகாதபோதும் அம்முயற்சிகளை தொடர்வதென அப்புலம்பெயர் அமைப்புக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ad

ad