புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012


மட்டு. தமிழரசுக்கட்சி விருப்பு வாக்கில் ரட்ணம் முதலாம் இடம்! பிள்ளையானும் வெற்றி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களை பெற்றிருக்கின்ற நிலையில் அந்த ஆறு உறுப்பினர்களும் யார் என்பதை அறிந்து கொள்ளும் விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி தமிழரசுக்கட்சி சார்பில் இராசையா துரைரத்தினம், கே.துரைராசசிங்கம், ஞா.கிருஷ்ணபிள்ளை,

மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல்! தொகுதி ரீதியான முடிவுகள்! ஒரே பார்வையில்....
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி தொகுதி ரீதியாக போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குளின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்றது, யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.  
 
அடுத்தகட்ட  நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். 
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள்

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி  1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்    1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும்,
   
ஐக்கிய தேசியக் கட்சி     74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்,

தேசிய சுதந்திர முன்னணி    9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
  


கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் :

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%)  வாக்குகள்  பெற்று 06 ஆசனங்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள்  பெற்று 01 ஆசனத்தையும்

சுயேட்சைக் குழு 8  : 5,355 (5.38%) வாக்குகளையும்,  ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்று



திருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள்  பெற்று 3 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.



அம்பாறை மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள்  பெற்று  5 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள்  பெற்று  3 ஆசனங்களையும்

இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள்  பெற்று  2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்ததாலும், பெருந்தொகையான மக்கள் வாக்களிக்காமல் இருந்தாலும் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும், திருகோணமலையில் 3 ஆசனங்களும் அம்பாறையில் 2 ஆசனங்களுமான 11 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும்,
சப்ரகமுவவில் 2  தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
திருகோணமலை தேர்தல் தொகுதி : இ.த.க வெற்றி
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,067
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,642
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 7,940
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,965
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 21,876
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,604
ஐக்கிய தேசிய கட்சி - 1,014
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 25,601
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12,610
இலங்கை தமிழரசுக் கட்சி - 8,767
ஐக்கிய தேசிய கட்சி - 1,174
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 22,884
இலங்கை தமிழரசுக் கட்சி - 11,702
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 5,990
ஐக்கிய தேசிய கட்சி - 1,184
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 14,617
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 13,011
ஐக்கிய தேசியக் கட்சி - 12,318
இலங்கை தமிழரசுக் கட்சி - 10,213
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 31,952
இலங்கை தமிழரசுக் கட்சி - 23,385
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,179 
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 104,682 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 62,190 (ஆசனங்கள் - 4)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 92,530 (ஆசனங்கள் - 5)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (ஆசனங்கள் - 4)
ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (ஆசனங்கள் - 3)
இலங்கை தமிழரசுக் கட்சி - 44,749 (ஆசனங்கள் - 2)
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 44,396 (ஆசனங்கள் - 3)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 43,324 (ஆசனங்கள் - 3)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (ஆசனங்கள் - 2)
தேசிய சுதந்திர முன்னணி - 24,439 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாண சபை: முழுமையான விபரங்களஅம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 200,044 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தமிழரசுக் கட்சி - 193,827 (11 ஆசனங்கள்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -  132,917 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி -  74,901 வாக்குகள் (4 ஆசனங்கள்)
தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் (1 ஆசனம்)

சப்ரகமுவ மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 488714 வாக்குகள் (28 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி 286857 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25985 வாக்குகள் ( 2 ஆசனங்கள்)
சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 213,734 (ஆசனங்கள் - 11)
ஐக்கிய தேசிய கட்சி - 130,417 (ஆசனங்கள் - 6)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 8,971 (ஆசனங்கள் - 1)

வடமத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 234387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 126184 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 104165 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 69943 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 19 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ad

ad