புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012

ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.  
 
அடுத்தகட்ட  நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். 
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 

ad

ad