புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

மூன்றரை வருடங்களின் பின்னர்  ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.

இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.
பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே


அவுஸ்திரேலிய அணி முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஓய்வு


அவுஸ்திரேலியா கிரிக்கெட் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிராக பேர்த்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், தாம் ஓய்வு பெற

பாராளுமன்றத் தெரிவுக்குழு எந்தவொரு வெளிச் சக்திகளுக்கும் பதில் கூறும் கடப்பாடுடையதல்ல

வெளியிலிருந்து வரும் உத்தரவுகள் செல்லுபடியற்றதாகும்
அமைச்சர் நிமலின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு சபாநாயகர் சமல் பதில்

பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையை விசாரணை செய்ய நிமித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று சபாநாயகருக்கு பதில் கூறும் கடப்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது. அது வேறு எந்தவெளிச் சக்திகளுக்கும்
நிறுவனங்களுக்கும் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்

பாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்
பொலிஸார் மூர்க்கம் .ரணகளமானது பல்கலைக்கழகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினரும்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையே விரட்டினோம்
பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் இறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். மாணவர்களைத் தடுக்க
வலம்புரிச் செய்தியாளர் மீது படையினர் தாக்குதல்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செய்தி சேகரிக்கச் சென்ற வலம்புரியின் செய்தியாளர் உதயராசா சாளின் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், வலம்புரிச் செய்தியாளர் எஸ்.இராஜேஸ்கரன் அங்கிருந்து படையினரால் விரட்டப்பட்டார்
ராஜீவ் கொலை சூத்திரதாரிகளை மத்திய அரசு விட்டு வைத்துள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

29 நவ., 2012

இராணுவம் காவல்துறையால் அத்து மீறி உடைக்கப்பட்ட பல்கலை கழக ஒன்றிய செயலாளரின் அறை (புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்ஹை சேர்ந்தபரமலிங்கம் தர்சானந்)
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்

ஜெயலலிதா -ஷெட்டர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன்: ஜெயலலிதா
 
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு
 ஆனந்த விகடன
விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து-
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:

“மாவீரர் தந்த பலத்தோடு அயராதுதொடர்ந்து முன்னெடுப்பொம்”- நியூயோக்கில் மாவீரர் நாளில் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை
'தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் களமாடிக் காவியமாகிவிட்ட நமது தேசத்தின் வீரப்புதல்வரை மனதிருத்தி நாம் வணங்கும் நாள்" அமெரக்காவின் நியூயோக்கில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாளில்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012
தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள்

சென்னை மாவீரர் நாள் நிகழ்வு: வைகோ, பழ.நெடுமாற​ன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா , புகழேந்தி தங்கராசு, வேளச்சேரி மணிமாறன் உரை
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த போராளிகளை நினைவுகூரும் நாளான மாவீரர் நாள் 2012 நவம்பர் 27 அன்று சென்னை தியாகராயார் முத்துரங்கன் சாலையில் மறுமலர்ச்சி திமுக ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பிரபாகரம்" - "உலகின் புதிய உயிரோடை"!

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
 அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள்

ad

ad