புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 
.புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 


.
“ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட எமக்கு, அந்த வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்றம் 1998ம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
.
அதனை எதிர்த்து நாம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். எமது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எமக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை 1999ம் ஆண்டு ஆயுள்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. 
.
2005ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நாம் அனுபவித்து விட்டோம். அதையடுத்து எம்மை விடுதலை செய்யக் கோரி, வேலூர் மத்தியச் சிறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு அளித்தோம். 
.
அதன் பின்னர், சிறைத்தண்டனைக் கைதிகளை முன்னதாகவே விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்யும் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2006ம் ஆண்டு நடைபெற்றது. 
.
அப்போது, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். 
.
எங்கள் கோரிக்கை குறித்து ஆலோசனைக் குழு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று 2008ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
.
அதன் பின் 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலும் விடுதலை செய்யக் கோரும் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 
.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் எங்கள் தண்டனைக் காலம் 20 ஆண்டுகள் முடிந்து விட்டன. எனினும் இப்போதும் நாம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோம். 
.
ஆயுள்தண்டனை கைதிகளான நாம், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழித்து விட்ட நிலையில், சட்ட விதிகளின்படி விடுதலை பெற எமக்கு உரிமை உள்ளது. 
.
எனவே, எம்மை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 
.
விடுதலை பெறுவதற்கு சட்டப்படி எங்களுக்கு உள்ள உரிமை குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த மனுக்களில் இவர்கள் கோரியுள்ளனர். 
.
இந்த மனுக்களின் மீதான விசாரணையை நவம்பர் 30ம் நாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

ad

ad