புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2012


சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 2012
தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் 27ம் திகதி காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல்லில் 2012 இன் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நினைவுக்கல்லிற்கான ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல் உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன்  நிறைவுபெற்றது.
தாயக விடுதலை வேள்வியிலே தம் இன்னுயிர்களை ஈகஞ்செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளை தமிழர் நினைவேந்தல் அகவமும், சைவத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து மதிப்பளித்தனர்.
அந்நிகழ்விற்குரிய மகத்துவத்துடன்  மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இம் மதிப்பளிப்பு நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த இருநூறிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பிறைபேர்க் மாநில குழசரஅ மண்டபத்தில் 27.11.2012 பிற்பகல் 12.45 மணியளவில் பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் மகளிர் அணியின் பொறுப்பாளர் திருமதி ப.நிர்மலா அவர்கள் ஏற்றி வைத்ததினைத் தொடர்ந்து நிகழ்வு வழமையான அனைத்து அம்சங்களுடனும் உணர்வும் எழுச்சியும் ஒருங்குசேர அனுட்டிக்கப்பட்டது.
இத்தேசிய மாவீரர் நாள் நிகழ்விற்கு சுவிசின் அனைத்து மாநிலங்களிலுமிருந்தும் திரண்டு வந்த எம்மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை எம் காவற்றெய்வங்களின்  திருவுருவப் படத்துக்கு முன்னால்  எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளின் தேசியப்பற்றை எடுத்துக்காட்டி நிற்கிறது.
இந்நிகழ்வில் தாயகம் சார்ந்த வெளியீடுகள் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்தோடு தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கான சிறப்புரையை தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இன உணர்வாளரும் பேராசிரியருமான தாயப்பன் அவர்கள் நிகழ்த்தினார். சுவிஸ் வாழ்  கலைஞர்களின் கலைநிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன்  இடம்பெற்று தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வானது இனிதே நிகழ்ந்து 18.30 மணிக்கு நிறைவெய்தியது.
தமிழீழ விடுதலைப் புலிகள்- சுவிஸ்கிளை

ad

ad