புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013


தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- தினக்கதிர் 


லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.  நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர்.  தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.------------


-தணிக்கை செய்துள்ளோம் முழுவதையும் பிரசுரிக்க முடியவில்லை மன்னிக்கவும் 

கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவன் தலையில்  கல்லை போட்டு கொன்ற பெண்ணை சின்னஞ்சிறிய பெற்ற பிள்ளைகளே  கேள்வி கேட்கும் அதிசயம் பாரீர் 
குதிரையிறைச்சியில் கலப்படம்
சுவிட்சர்லாந்தின் போஆப் என்ற தகவல் தொடர்பாளி அளித்தபேட்டியில் கோமிகல் என்ற பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த லாசாக்னா என்ற உறைந்த இறைச்சியில் மாட்டிறைச்சியோடு குதிரையிறைச்சியும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் வைத்து நேற்று அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா - மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்குணம் தனபாலசிங்கம்-pung 1


திருமதி சற்குணம் தனபாலசிங்கம்
பிறப்பு : 14 நவம்பர் 1928 — இறப்பு : 17 பெப்ரவரி 2013
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் தனபாலசிங்கம் அவர்கள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம்(ஆசிரியர்), திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சு.தனபாலசிங்கம்(கூட்டுறவு திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), விஜயகுமாரன்(ஓய்வுப்பெற்ற அதிபர்- வவுனியா), துதியானந்தன்(ஜெர்மனி), ரவிக்குமார்(கனடா), வசந்தகுமார்(சோபனாஸ்-வசந்தன் கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), இந்திரகுமார்(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, தர்மபூபதி(கனடா), முத்தம்மா(ஓய்வுப்பெற்ற அதிபர்- கனடா), நாகரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, இரத்தினவேணி, லலிதா, ஜெகதா, சுசீலா, தர்மலிங்கம், மஞ்சுளா, கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம்(அதிபர்) மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற கமலரெத்தினம் தனிநாயகம்(ஆசிரியர்- கனடா) அவர்களின் சகலியும்,
கலைசெல்வி, அனு, மனோ, காயத்திரி, சுதர்சன், விபிதா, திவாகரன், ரதீஸ், கிசோத், றஜீவன், பிராசாந், அஜிதா, சரண்யா, ஆதவன், லக்கீசன், தர்சிகன், கவிசா, விதுஸ், தரணிகா, றக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசா, சாருயா, தனுசன், கீர்த்தனன், சங்கீதன், கவிநயன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக Highland Funeral Home (3280, Sheppard Ave East, Warden And Sheppard) என்னும் இடத்தில் 20-02-2013 புதன்கிழமை மாலை 5:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்ட்டு, 21-02-2013 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை அதே மண்டபத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33777803645
விஜயகுமார் — இலங்கை
தொலைபேசி: +94245680452
துதி — ஜெர்மனி
தொலைபேசி: +49607138290
வசந்தன் — கனடா
தொலைபேசி: +14167397273
சியாமளா — கனடா
தொலைபேசி: +14164296225
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33140371470
இந்திரன் — கனடா
தொலைபேசி: +14164237584
ரவி — கனடா
தொலைபேசி: +14164292473
செல்லிடப்பேசி:+16776000083
** இந்

ஆறுமுகம் கண்ணையா pung 7

திரு ஆறுமுகம் கண்ணையா
தோற்றம் : 1 யூலை 1944 — மறைவு : 13 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கண்ணையா அவர்கள் 13-02-2013 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜேந்திரா(கனடா), விஜயமாலா(மாலா-லண்டன்), விஜயமாலினி(விஜிதா-லண்டன்), விஜயரஜனி(இந்தியா), மயூரன்(இந்தியா) ஆகியோரின் அருமை தந்தையும்,
கனடாவில் வசிக்கும் வல்லிபுரம்(ஆசிரியர்)அருளம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வைத்தியலிங்கம்(கிராமசேவகர்), லட்சுமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, நல்லையா ஆகியோரின் மைத்துனரும்,
தயானந்தி(கனடா), ஜீவதாஸ்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), அருண்பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அஷ்மிகா, வர்ஷன், நிகாஷ், கீர்த்தனா, விதுர்ஜனா, ஹரிப்பிரியன், ஹரிசுதன், யதுர்ஸன், தன்சிகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919940474372
விஜேந்திரா(மகன்) — கனடா
தொலைபேசி: +14167249468
மாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034414459
அருண்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659601216

** இந்த அறி

சி.சிறிதரன் பா.உ புலனாய்வு பிரிவினரால் மூன்று மணி நேர விசாரணையின் பின்னர் விடுவிப்பு
நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கில் புனர்வாழ்வு பெறாத நிலையில் மூவாயிரம் முன்னாள் போராளிகள்?!

புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் மூவாயிரம் பேரிடம் இருவாரங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அதில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டு

குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மரணம்! ஊர்காவற்றுறையில் சம்பவம


ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள வேனிக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்றுக் நண்பகல்12 மணியளவில் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ad

ad