புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013


கிழக்கில் புனர்வாழ்வு பெறாத நிலையில் மூவாயிரம் முன்னாள் போராளிகள்?!

புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் மூவாயிரம் பேரிடம் இருவாரங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அதில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டு
சென்று விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ் நடவடிக்கை தேசிய பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் மூவாயிரம் முன்னாள் விடுதலைப்புலிகள் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி தமது குடும்பங்களுடனும் மற்றும் திருமணம் முடித்து குடும்ப வாழ்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மற்றும் வெளிநாடு சென்று திரும்பியுமுள்ளனர்.
இவர்கள் விசாரணைகள் எதுவும் இன்றி இருந்துள்ளனர். இவர்கள் புனர்வாழ்வு பெறாத நிலையில் இவர்கள் தொடர்பான விசாரணைகள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்த விசாரணைகளில் சிலரை 4ம் மாடியில் விசாரிக்க வேண்டிய தேவை காரணமாக கொண்டு சென்று விசாரிக்கப்பட்டுள்ளதுடன் இவ் விசாரணையின் பின்னர் புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பி புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாங்கேணி பிரதேசத்தில் முன்னாள் போராளிகள் மூவரை கைது செய்து 4ம் மாடிக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனேகரன் தெரிவித்தார். என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad