புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013

குதிரையிறைச்சியில் கலப்படம்
சுவிட்சர்லாந்தின் போஆப் என்ற தகவல் தொடர்பாளி அளித்தபேட்டியில் கோமிகல் என்ற பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த லாசாக்னா என்ற உறைந்த இறைச்சியில் மாட்டிறைச்சியோடு குதிரையிறைச்சியும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
குதிரையிறைச்சி கலப்படத்தின் அளவு துல்லியமாகத் தெரிவில்லை என்றும் கூறினார்.
மேலும் வாடிக்கையாளர்கள் கலப்படம் நிறைந்த உணவுப் பொருளைத் திரும்பிக் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுகொள்ளலாம் என்றும் கூறினார். சுவிட்சர்லாந்தில் குதிரையிறைச்சி உண்பது சகஜம் தான், ஆனால் பிரிட்டனில் அது அருவருப்பாகக் கருதப்படுகிறது.
கோமிகெல் நிறுவனம் தனக்கு வேண்டிய இறைச்சியை மற்றொரு பிரான்ஸ் நிறுவனமாக ஸ்பாங் ஹீரோவில் இருந்து பெற்றது.
ஸ்பாங்ஹீரோ நிறுவனம் அந்த இறைச்சியை ரோமேனியாவில் உள்ள இரண்டு ஆடுமாடு வெட்டும் இடங்களிலிருந்து பெற்றுள்ளது.
இந்தக் கோமிகெல் நிறுவனம் 16 நாடுகளில் தனது உணவுப் பொருட்களை விற்றுவருகிறது குறிப்பிடத்தக்கது

ad

ad