புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

 போர்குற்ற விசாரணை நடத்தியே தீரவேண்டும்; நவிப்பிள்ளையிடம் வலியுறுத்தியது தமிழ்க் கூட்டமைப்பு 
 "இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் படைத்தரப்பினர் நடத்திய நடத்திக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும்.''
 
இலங்கை அரசின் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முனையும் போது கலவரப்படக் கூடாது: மனோ கணேசன்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும் போது, மண்ணெண்ணெயில் விழுந்த சாரைப்பாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
யாழில் 16 வயது மாணவியைக் காணவில்லை: பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் ஏழாலைப் பிரதேசத்தில் 16 வயது மாணவியொருவர் காணாமல்போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை
போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
ஓமந்தை சோதனைச் சாவடியில் பரிசோதனைகள் நிறுத்தம்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்தபோது,  பிரதான சோதனைச் சாவடியாக இருந்த ஓமந்தையில் இன்று நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து
பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் நவநீதம்பிள்ளையை, திருமணம் செய்ய விரும்புவதாக, அந்நாட்டு அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்தார்.
இறுதிப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவிபிள்ளை!- தடுத்து நிறுத்திய இல. அரசு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்த
இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் மக்கள் காணாமல் போகவில்லை: கோத்தபாய நிராகரிப்பு
வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
22 வயதான யுவதியை கடத்தி நிர்வாணப் படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!
உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக மஹர பெண்கள் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த 22 வயதான யுவதியை கடத்திச் சென்று ஆடைகளை அவிழ்த்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்தது சென்ற யுவதியை பலவந்தமாக முச்சக்கர வ

கொழும்பு, மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது இராணுவத்தினரை தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவிப்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம்

விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு

ஐநா அலுவலகத்தின் உள்ளே அரச “CID” திணறிய ஊடகவியலாளர்கள்!! பதறிய நவிப்பிள்ளை??

ஐநா அலுவலகத்தின் உள்ளேயும் புலனாய்வாளர்கள் – ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை குழப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில்
சென்னையில் இருந்து  ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் கோளாறு:
165 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 165 பயணிகள் இருந்தனர்.
பெற்ற மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு41 ஆண்டு சிறைத்தண்டனை
பெற்ற மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புதுச்சேரி தாயாருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் முனையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:
வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!- சில சம்பவங்கள் தனிப்பட்டவை: ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ad

ad